ஜெயமோகன் அரவம்

4 பிப்

சுயமோகன் (ஜெயமோகன் என்றும் பாடம்) மருதையனின் நூல் வெளியீட்டு விழா உரை ஒன்றை கேலி செய்து மருதையப்பாட்டா… என்ற தலைப்பில் அண்மையில் எழுதியிருக்கிறார். அதில் மருதையனை கிராமத்துப் பெரிசு (பழமையில் இனிமை காண்பவர்) என சுட்டுகிறார். அதில் பெரிசுக்கு வாசிப்பு இல்லை என்றும், பெரிதாக வாசிப்பு இல்லை என்றும், பாழும் நாகரிகம் வந்து கெடுப்பதாக அவர் புலம்புவதாகவும், இயக்கவியல் பொருள்முதல்வாத பார்வையில் அல்லாமல், மனதுக்குப் பட்டதைச் சொல்வதாகவும் நக்கல் அடித்திருக்கிறார். இலக்கியம் என்றால் ராணிமுத்து வாசிப்பு என்று மருதையன் நினைத்துக்கொண்டிருப்பதாகவும் எள்ளி நகையாடுகிறார். இது ஒரு புறம் என்றால், நூ்ல் வெளியீட்டு விழாக் கூட்டத்தில் மருதையன் உரையை கேட்டவர்களையும் இழிவுபடுத்தியுள்ளார். “பெரிசு பசங்களிடம் வாசிக்கச் சொல்கிறது. வசைபாடுவதற்கு வாசிப்பு எதற்கு என்ற கொள்கை கொண்ட பசங்கள் அதை கேட்பதாக தெரியவில்லை” என்கிறார். பிறகு “சமூகத்தின் வளர்சிதை மாற்றம் பற்றி மார்க்ஸியம் முரணியக்க இயங்கியல் நோக்கில் சொன்னவற்றை எல்லாம் சொல்லப்போனால் வசவு (வினவு) தோழர்கள் பின்பக்க மணலை தட்டிக்கொண்டு எழுந்து சென்று விடுவார்கள்” என்கிறார்.

வினவு தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையிலும், மருதையனின் உரையை நூல் வெளியீட்டு விழாக் கூட்டத்தில் நேரடியாகக் கேட்டவன் என்ற முறையிலும் சில கருத்துகளை பதிவு செய்ய விரும்பியே இந்த விளக்கம்…

கிராமத்துப் பெரிசின் அதிநீளமான தன்னுரையா?

மருதையனின் உரை நிகழ்த்துக் கலை போன்றது. அதில் ஏற்படும் லயிப்பு மயக்கத்திற்குப் பதிலாக விழிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஏற்கும் கருத்துகளை ஒட்டியு்ம், மறுக்கும் கருத்துகளை வெட்டியும் வாதங்களை ஊடும் பாவுமாக நெய்தபடி சுழலேணி போல மேலேறிச் செல்லும் உரை அது. அவரது உரையில் இயக்கவியலின் அழகையே ஒருவர் காண முடியும். எடுத்துக் கொண்ட கருத்தின் குறிப்பான தன்மைகளையும், சிறப்பான தன்மைகளையும் பொதுவான தன்மைகளையும் காரண, காரிய விளைவுகளையும், தற்செயல் அவசியங்களையும் காட்டத் தவறியதில்லை அவரது உரை. அவரது எழுத்துகளும் அப்படியே. காழ்ப்புணர்ச்சியும், வளர்ச்சிக்கான மாற்றங்களை மறுக்கும் தன்மையும் அற்றவர்கள் இதை உணர்ந்திருப்பர். இதற்கு ம.க.இ.க.காரனாகவோ, வினவு தோழராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

அப்படியானால் மருதையனை எள்ளி நகையாடுமாறு ஜெயமோகனை தூண்டியது எது? காழ்ப்புணர்ச்சியும், வளர்ச்சிக்கான மாற்றங்களை மறுக்கும்  தன்மையுமே என்பது கூறாமலே விளங்கும்.

மனதுக்கு பட்டதை சொல்கிறாரா மருதையன்?

“இயக்கவியல் பொருள்முதல்வாத பார்வையில் அல்லாமல், மனதுக்குப் பட்டதைச் சொல்கிறார் மருதையன்” என்பது ஜெயமோகனின் ஆவலாதி. மனதுக்குப்பட்டதை சொல்வதென்றால் எப்படி? சான்றாக, ஜெயமோகன் தனது ஆர்எஸ்எஸ் மனதுக்குப்பட்டதை பல பதிவுகளில் சொல்கிறார். உதாரணத்திற்கு ஒன்று மீனவர் படுகொலைகள். இதில் ஆர்எஸ்எஸ் ஆட்சி மீண்டும் வருவது எப்போ? மோடி பிரதமராவது எப்போ? என கையற்றுப் புலம்புகிறார். ஜெயமோகனின் ஆர்எஸ்எஸ் மனதுக்குப்பட்டதை சொன்னால், அது இப்படித்தான் இருக்கும்.

ஆனால் மருதையனின் உரையை நேர்மையாக அணுகும் ஒருவர் புரிந்து கொள்வது என்ன?

மருதையனின் பேச்சில் நீங்கள் இப்படி நக்கல் அடிக்கும்படி என்ன
இருக்கிறது? NCBH, க்ரியா பதிப்பகம் போன்றவற்றில் நானும் புத்தகம் தேடிஇருக்கிறேன். அனேகமாக நீங்களும் தேடி இருப்பீர்கள். கீழைக்காற்றுஎன்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை, ஆனால் இடதுசாரிப் புத்தகங்களைவிற்கிறார்கள், ம.க.இ.க.வை விமர்சனம் செய்யும் புத்தகங்களை விற்கிறார்கள்என்கிறார். என்ன தவறு? ஓவியர் மருது என்பவர் நன்றாக படம்வரைந்திருக்கிறாராம். அது எனக்கும் உங்களுக்கும் பிடிக்கிறதோ இல்லையோஅவரது ரசனை அப்படி. நடுத்தர வர்க்கம் பிள்ளைகளை படி படி என்றுவிரட்டுகிறது என்கிறார். உண்மைதானே! விரட்டுங்கள், ஆனால் பாடங்களைத்
தாண்டி புனைவுகளை, இலக்கியத்தை படிக்க வையுங்கள் என்று நீங்கள் கூடஅடிக்கடி சொல்வீர்கள். ஆர்காட்டு “நவாபுக்கு” இன்னும் மான்யம் என்கிறார்.

“நவாப்” என்ன ஸ்பெஷல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? தொலைக்காட்சி(இளைஞர்கள்) மூளையை மழுங்க அடிக்கிறது என்கிறார். நீங்கள் தொலைகாட்சிஅதிகம் பார்ப்பதில்லை என்று சொன்ன நினைவு இருக்கிறது. “ஜனநாயகம் என்றால்
என்ன? கௌரவம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு …அது எதுவும் தொலைக்காட்சியில் பேசப் படுவதில்லை. எதுவும் நின்றுவிவாதிக்கப் படுவதில்லை. ஏன் இவ்வாறு என்பது முக்கியமான கேள்வி.”

என்கிறார். சரிதானே? அவர் சொல்லும் காரணத்தை நான் மறுக்கிறேன் – “இவ்வாறுசிந்திக்கும் திறனற்ற, சிந்திக்கும் தேவை அற்ற உழைக்கும் மிருகங்களைஉருவாக்குவதற்குத் தான் உலக முதலாளித்துவம் செயல்படுகிறது.” ஆனால்கேள்வியில் என்ன குறை காண்கிறீர்கள்? “உண்மையான மகிழ்ச்சியை பாப்கார்ன்
தலைமுறை அறியாது!” என்பதை நீங்கள் மறுக்கலாம். ஆனால் கனமான விஷயங்கள்மேலும் மேலும் மலினப்படுகின்றன, அதற்கு ட்விட்டர், எஸ் எம் எஸ்,எல்லாமும் ஒரு காரணம், சென்சேஷன், 15 நிமிஷ பிராபல்யம் என்பதுதான் இன்றுஊடகங்களின் நோக்கம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அவர் “நோக்கமற்ற
இன்பவாதப் படிப்பினால் பலனில்லை!” என்று சொல்வதைத்தானே இன்னொரு விதமாகரமணி சந்திரனையும் கோவி.மணிசேகரனையும் பற்றி என்ன நினைக்கிறோம்? அதுவும் அவர் முதலாளித்துவத்திலும் நல்லஎழுத்தாளர்கள் உண்டு, அவர்களைப் படிப்பது அவசியம் (மறுத்துப்பேசுவதற்காகத்தான்) என்கிறார்.

உங்களைப் பற்றி அவர் “இன்பவாதப் படிப்பு” என்கிறார். இதில் என்ன
சந்தேகம்? உங்களைப் படிப்பதில் துன்பம் இருந்தால் யார் படிப்பார்கள்? :-) அப்பா அம்மா பரீட்சை என்ற நோக்கத்தோடு படி என்கிற மாதிரி இவர் புரட்சிஎன்ற நோக்கத்தோடு படிக்க வேண்டும் என்கிறார். ஒரு வேலை அதனால்தான் பாட்டாஎன்கிறீர்களோ?

இவரது “எல்லா படிப்பும் ஒரு இலக்குக்கே (அதுஇவருக்கு புரட்சி)” மாதிரி ஒரு சீரியசானபேச்சைக் கிண்டல் செய்துஎழுதியதும் எனக்கு கொஞ்சம்ஆச்சரியமாக இருக்கிறது!”

இது ஜெயமோகனின் ரசிகர் ஒருவர் அவரைப் பார்த்து எழுப்பியுள்ள கேளவி. அதுதான் அவர் இயக்கவியல் பார்வையில் அல்லாமல் மனதுக்குப்பட்டை கூறினார் என்று சொல்லிவிட்டேனே என எரிந்து விழுகிறார் ஜெ.மோகன். சரி அப்படி என்ன மருதையனின் உரையில் இயக்கவியல் பார்வைக்கு கேடு வந்து விட்டது?

“நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து வருகிறார்கள். அந்தப் பிள்ளையை ஆய கலைகள் அறுபத்து நான்கிலேயும் அதற்குள்ளே தயார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போது ஆய கலைகள் புதிதாக வேறு அறுபத்து நான்கு உள்ளன. பழையவை அல்ல. கம்ப்யூட்டர், இங்கிலீஷ், ஃபிரெஞ்சு மொழி என்று பல கற்றுக் கொள்ளவேண்டும் இதுக்கான ஒலித்தகடுகள், வீடியோக்கள் இதையெல்லாம் வாங்கி எதற்கு தயார் செய்கிறார்கள்?

பிள்ளையை விளையாட விடாமல் “படி படி” என்று கொல்கிறார்கள். இதையெல்லாம் பல நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பார்க்கிறோம். நாமும் இங்கே படிக்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். பின் என்ன பிரச்சனை? எதற்குப் படிக்கச் சொல்கிறார்கள் என்றால் படித்து முடித்த பின் வேலை. படித்து முடிக்கவே வேண்டாம். காம்பஸ் இன்டர்வியூவில் வேலை. முன்னாலேயே வேலை கிடைக்க வேண்டும். வேலைக்குப் போவதற்காக, நல்ல வேலைக்குப் போவதற்காக,  அமெரிக்கா போவதற்காக, பொருளீட்டுவதை உத்திரவாதம் செய்து கொள்வதற்காக, ஒரு வாழ்க்கை தகுதியைப் பேணிக் கொள்வதற்காகப் படி படி என்று சொல்கிறார்கள்.

படிப்பு என்பதைப் பற்றிய பார்வை பெற்றோர்களிடம் இப்படி இருக்கிறது. இது படிப்பு அல்ல. இதை நான் நிராகரிப்பதற்காகச் சொல்லவில்லை. இப்போது இந்தக் காய்ச்சல் என்பது பத்தாம் வகுப்பிலிருந்தே தொடங்குகிறது. இது முன்னர் கிடையாது. பிள்ளைக்குப் பத்தாவது பரீட்சை என்றால் பெற்றோர் எங்கும் போவதில்லை. தாயும் சரி தந்தையும் சரி கூடவே இருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஏனென்றால் போட்டி மிகுந்த உலகம். இதில் மதிப்பெண் வாங்கி வந்தால் தான் உண்டு. அரசுக் கல்லூரிகளில் ஒரு சீட்  கிடைக்க இவ்வளவு மார்க் வாங்க வேண்டும். இல்லையென்றால் சுயநிதிக் கல்லூரிகளுக்குச் சென்று பணம் கட்ட முடியாது. அரசுக் கல்லூரிகளில் வாங்க 98 மதிப்பெண் வேண்டுமென்றால் 97.5 வாங்கினாலும் போயிற்று, சீட் கிடைக்காது. அப்படி விரல் நுனியில் பையனை நெருக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

மரு.ருத்ரன் சொல்லுவார் இதனாலேயே பிள்ளைகள் மனநோய்களுக்கு, மன அழுத்தங்களுக்கு, பதட்டங்களுக்கு சிறிய வயதிலேயே ஆட்படுகிறார்கள் என்று. அப்படித் தள்ளுகிறார்கள் பெற்றோர்கள். ஏன்? பிள்ளைகள் நலத்தின் பொருட்டுத்தான் செய்கிறார்கள். பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் என்று தான் செய்கிறார்கள். அப்படி படித்து முடித்து செய்கின்ற பணி என்னவென்றால் ஒரு முதலாளியினுடைய தொழிற்சாலை இயந்திரத்தின் போல்ட் நட்டாகவோ, அல்லது ஒரு வர்த்தக இயந்திரத்தின் உப உறுப்பாகவோ அல்லது ஒரு விளம்பர இயந்திரத்தின் பகுதியாகவோ வேலை செய்யப் படிக்கிறார்கள். அங்கே ஆக்கபூர்வமானது எதுவும் இல்லை. அவன் சொல்வதைச் செய்வதற்கு முன்னாலேயே தயார் செய்து கொண்டு போகிறோம்.

இயந்திரத்தை முதலாளி கைக்காசு போட்டு வாங்குகிறான். ஆனால் இயந்திரத்தின் உப உறுப்புகளாகச் செல்லக் கூடியவர்கள் அது ஐ‌டி துறை ஊழியர்களாக இருக்கட்டும் வேறு யாருமாக இருக்கட்டும் எல்லாருமே தங்கள் சொந்தச் செலவில் தங்களைத் தயாரித்துக் கொண்டு போகிறார்கள். ஒரு மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கிற்கு செல்வாக்கில்லை. எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் படிப்பு வேண்டாம் மல்டிமீடியா படித்தால் அதிக சம்பளம் வாங்கலாம். இன்ஸ்டிட்யூட்டில் ஒரு வருடம் படித்தால் நல்ல சம்பளம்.

இந்தச் சந்தையிலே மலிவு விலையிலே இந்த உப உறுப்புகளை வாங்குவதற்காக இதை மட்டும் படித்தால் போதும் என்ற மனநிலையை முதலாளித்துவம் பயிற்றுவிக்கிறது”

 

என்கிறார் மருதையன். இது மார்க்சிய இயக்கவியல் பார்வையில் அல்லாமல் ஆர்எஸ்எஸ்சின் இந்துத்வ பார்வையில் விளைந்த கருத்துகளா என்ன? இதில் முதலாளித்துவத்தை வீழ்த்தி கம்யூனிச சமூகத்திற்கு முன்னேறுவதற்கான ஆர்வம் தெரிகிறதா? இல்லை கணினி உள்ளிட்ட நவீன வளர்ச்சிகளை மறுத்துவிட்ட மீண்டும் தீப்பெட்டி ஒட்டப் போவோம் என்ற புலம்பல் தெரிகிறதா? அறிவியல் புனைகதைகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைக் கதைகளை எழுதி புளகாங்கிதம் அடைந்த ஜெயமோகனிடம் கருத்து கேட்டால் அவர் வேறு எப்படிக் கூற முடியும்?

நல்லரவங்கள் பிளவுபட்ட நாக்குகளுடன்  காத்திருப்பது மருதையனுக்குத் தெரியாதா என்ன? அதனால்தான்

“இதைச்‌ சொல்லும்போது நவீன மாற்றங்களை எதிர்த்து நான் பேசுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நவீன மாற்றங்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது என்று பழமைவாதியைப் போலப் பேசுகிறேன் என்று இருந்து விடக்கூடாது. அப்படி அல்ல. ஆனால், இந்த நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிட்டு நம் மீது ஒரு ஆயுதம் போலப் பிரயோகிக்கப் படுகின்றன”

என்று திரிபுகளுக்கு வாய்ப்பின்றி தெளிவாகவே கூறுகிறார் மருதையன்.

 

இன்ப நாட்டம் என எதைக் கூறுகிறார்?

“அந்தக் காலத்தில் கண்டதை வாங்கிப் படித்துக் கொண்டிருப்பேன். ஒரு சமயம் ஒரு தோழருடன் ஒரு நூல் பற்றி விவாதிக்க வேண்டி இருந்தது. அதைப் படிக்காமல் ஏதோ Sunday அல்லது India Today  வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர் நான் இன்ப நாட்டத்திற்காகவே படிப்பதாகக் கூறினார். அப்போது எனக்குப் புரியவில்லை. நாம் சீரியசாகத் தானே படிக்கிறோம். இதிலென்ன pleasure என்று நினைத்தேன். உங்கள் தனிப்பட்ட இன்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்று அவர் சொன்னார். அது உண்மை. அது ஒரு இலக்கற்ற படிப்பு. அப்படிப் படிப்பதிலேயே ரசனை கொண்ட ஒரு இலக்கியவாதக் கூட்டம் இருக்கிறது.

அவர்கள் தான் இந்தக் கூட்டங்களை எல்லாம் நடத்துவது. சங்கீத சீசனில் ம்யூசிக் அகாடமிக்கு கச்சேரி கேட்க வருகிறார்கள் இல்லையா அது போல ஜெயமோகன் புத்தகம் போட்டால் ஒரு கோஷ்டி வரும். கூட்டம் கூட்டி, அவர் இலக்கியத்தைப் பற்றி விதந்து பேசுவார், அதை ததாரினானாவிற்கு தலையாட்டுவது போல தலையாட்டி ரசிப்பதில் ஒரு சுவை. அப்பறம் படிக்கும் பழக்கமே குறைந்து போய்விட்டது, நம் கலாச்சாரம் என்னவாகும் என்று தெரியவில்லை, புத்தகங்கள் கேரளாவில் நிறைய விற்கிறது, இங்கே விற்க மாட்டேன் என்கிறது, இலக்கியம் அங்கே வளர்கிறது இங்கே வளரவில்லை இந்த மாதிரி கவலைகளைப் பகிர்ந்து கொண்டு கிளம்பிப் போய் விடுவார்கள். இவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சிந்தனதையில் கிழடு தட்டிப் போனவர்கள்”

 

என்கிறார் மருதையன். ஜெயமோகனது ஆத்திரத்திற்கு காரணம் இதைப் படித்தவுடன் பளிச்சென விளங்கி விடுகிறது. “சமீப காலமாக பெரிசு சிற்றிதழ்களைக்கூட வாசிப்பதில்லை என்றும் தெரிகிறது. இலக்கியம் என்றால் ராணிமுத்து வாசிப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்” என ஜெ.மோகன் கோயபல்ஸ் வேலை பார்ப்பதற்கும் காரணம் புரிந்து விடுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: